இட ஒதுக்கீடு : எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது - அமைச்சர் ராஜ கண்ணப்பன்!

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பாமக சட்டமன்ற கட்சித் தலைவர் ஜிகே. மணி வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதையும் படிக்க : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி...!
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், பல்வேறு சமுதாய மக்கள் வசித்து வரும் நிலையில் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட முடியாது என்று கூறினார்.
மேலும், தனிப்பட்ட எண்ணிக்கை அடிப்படையில் எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், கல்வி , பொருளாதாரம் , வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் கூறினார். தரவுகள் இல்லாமல் எந்த சமூகத்திற்கும் இடஒதுக்கீடு கொடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் கூறியதை அமைச்சர் பட்டியலிட்டார். தொடர்ந்து, வன்னியர் உள் இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.