"கட்சியின் தலைமை ஒப்புதல் கொடுத்தால் நீதிமன்றத்தை முற்றுகையிடவும் நாங்கள் தயங்க மாட்டோம்"....-ரஞ்சன் குமார் .

"கட்சியின் தலைமை ஒப்புதல் கொடுத்தால் நீதிமன்றத்தை முற்றுகையிடவும் நாங்கள் தயங்க மாட்டோம்"....-ரஞ்சன் குமார் .

ராகுல் காந்தி-யை எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அதுதொடர்பான , மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததை கண்டித்தும்,மத்திய அரசின் அலுவலகத்தை முற்றுகையிட்டு சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒப்புதல் கொடுத்தால் நீதிமன்றத்தை முற்றுகையிடவும் நாங்கள் தயங்க மாட்டோம் என  காங்கிரஸ் கட்சியின்  ஆதிதிராவிடர் நலத்துறை பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் இன்று தபால் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமையில், நுங்கம்பாக்கம் வருமான வரிதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் குமார் கூறியதாவது.....

மக்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் நீதிமன்றங்களே,  இன்று பிரதமர் மோடியின் சர்காரின் கீழ் தான் இயங்குகிறது எனவும், இந்தியா முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சியின் தலைவர்களும் அனைத்து முதலமைச்சர்களுக்கும் ராகுல் காந்திக்கு எதிராக குரல் கொடுத்தும் இன்று மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றால் மோடியின் மிரட்டலுக்கு பயந்து சில நீதிமன்றமும்  சில நீதிபதிகளும் செயல்படுவதாகவும் கூறினார். 

மேலும் அவர், காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒப்புதல் கொடுத்தால் நீதிமன்றத்தை முற்றுகையிடவும் தாங்கள் தயங்கப்போவதில்லை எனவும், தெரிவித்தார். 

இதையும் படிக்க } ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு...! இன்று விசாரணை...!!