எந்த துறையாக இருந்தாலும் அதன் முக்கியத்துவம் அறிந்து செயல்படுவேன்....!!

எந்த துறையாக இருந்தாலும் அதன் முக்கியத்துவம் அறிந்து செயல்படுவேன்....!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக பதவிபிராமணம் செய்யப்பட்ட மன்னார் குடி சட்டமன்ற உறுப்பினர் டி ஆர் பி ராஜா, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் சென்னை காமராஜர் சாலையில்  உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவரை தொடர்ந்து அமைச்சர்கள் துரை முருகன், கே என் நேரு, மனோ தங்கராஜ், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, செந்தில் பாலாஜி, ஐ பெரியசாமி, பழினிவேல் தியாகராஜன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய வெளிச்சத்தை எடுத்து வந்துள்ளேன்.  முதல்வர் என்மீது நம்பிக்கை வைத்து பால்வளதுறையை என்னிடம் ஒப்படைத்துள்ளார்.  அதில் உள்ள சவால்களை எளிதாக எதிர்கொண்டு சிறப்பாக என் பணியை செய்வேன்” என்றார். 

மேலும் “இலக்கா மாற்றம் செய்ததில் எனக்கு எந்தவித கடினமும் இல்லை.  எனக்கு பால்வளதுறை கொடுத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது.  எந்த துறையாக இருந்தாலும் அதன் முக்கியத்துவம் அறிந்து செயல்படுவேன்” என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com