தமிழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தமிழிசை இருப்பேன்...!!

தமிழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தமிழிசை இருப்பேன்...!!

தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடைபெறுவதாக கலைமாமணி விருது வழங்கும் விழாவில் புதுச்சேரி  துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மற்றும் கலைமாமாணி விருது வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.  10 ஆண்டுகளுக்கு பின்னர் இயல், இசை, நாடகம், நடனம், ஒவியம் சிற்பம், நாட்டுப்புறக் கலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 216 நபர்களுக்கு கலைமாமணி விருதை துணைநிலைலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வழங்கி பாராட்டினர்.  நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் விரைவில் தமிழ்மாமணி விருதுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்த அவர் மேடை பேச்சாளர்களுக்கும் சிறந்த பேச்சாளர்களுக்கான விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், கலைஞர் பேச்சாளராக இருந்துள்ளார் எனவும் பேச்சாளர்கள் கலைஞர்களாக பார்க்கப்படுவதில்லை எனவும் கூறிய அவர் புதுச்சேரியில் தமிழை விளையாட வைக்க வேண்டும் எனக் கூறினார்.  மேலும் தமிழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தமிழிசை செளந்தரராஜன் இருப்பேன் என்றவர் இன்று தமிழ்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடக்கின்றது என்றும் பாரதிதாசன் பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக புதுச்சேரி அரசு பாடி அவருக்கு புகழ் சேர்க்கப்படுகின்றது என்றவர் அரசு அனைத்து திட்டத்திலும் தாமதம் என்று சொல்பவர்கள் இந்த விருதை வழங்கக்கூட தாமதித்தவர்கள் தான் என்றும் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிக்க:  பிரதமரின் மனதின் குரல் 100-வது அத்தியாயம்.... நாளை சிறப்பு ஏற்பாடுகள்!!!