ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை யார் யாருக்கு? விளக்கமளிக்கும் முதலமைச்சர்!

ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை யார் யாருக்கு? விளக்கமளிக்கும் முதலமைச்சர்!

Published on

ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். 

தகுதி வாய்ந்த பெண்களுக்கு, மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு, பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை எழுப்பினர். இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி, பதில் நேரத்தில் யார் யாருக்கு மகளிர் உரிமைத் தொகை என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்றால், அது தேவையானவர்களுக்கு தான் என்பது பொருள். மேலும், உரிமை தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது என்றும், இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கவே மகளிர் உரிமை திட்டம் என்றும், பெண்களின் வங்கி கணக்கிற்கே மகளிர் உரிமைதொகை செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நடைபாதையில் வணிகம் செய்பவர்கள், கடற்கரை நோக்கி விரையும் மீனவ பெண்கள், வீட்டு வேலை செய்வோர், சிறு தொழிலில் சொற்ப வருமானம் பெறுவோர் என தேவை உள்ள ஒரு கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com