அடுத்த முதலமைச்சர் யார்...? தனித்தனியே ராகுல் காந்தியை சந்தித்த தலைவர்கள்...!

அடுத்த முதலமைச்சர் யார்...?  தனித்தனியே ராகுல் காந்தியை சந்தித்த தலைவர்கள்...!

 
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி நடைபெற்று பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி பெற்றது. 

நடந்து முடிந்த தேர்தலில் 224 தொகுதிகளில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. இந்நிலையில் கர்நாடக முதலமைச்சராவது டி.கே.சிவகுமாரா அல்லது சித்தராமையாவா என்ற முடிவில்,  கடந்த 5 நாட்களாக இழுபறி நீடித்து வருகிறது. 

முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதலமைச்சரை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்வார் என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. 

இவ்வாறிருக்க, முதலமைச்சரும், புதிய எம்.எல்.ஏக்களும் மே  18 -ல் ( நாளை ) பதவியேற்பர் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, டெல்லி சென்ற சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் தனித்தனியாக மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தனர். 

Siddaramaiah meets Rahul amid suspense over new Karnataka CMKarnataka Election 2023: Will JD-S support Congress to form govt? DK  Shivakumar says this | Mint

இதையும் படிக்க      } உதயநிதி ரசிகர் மன்ற அலுவலகத்தில் சோதனை - நேரில் ஆஜரான செயலாளர் !!!!!

இந்நிலையில், டெல்லி ஜன்பத்தில் உள்ள ராகுல்காந்தியை, இருவரும் இன்று தனித்தனியாக சந்தித்தனர். நாளை முதலமைச்சர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை முதலமைச்சர் யார் என்றே அறிவிக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க      } ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய நிர்வாகி மீண்டும் திமுகவில் சேர்ப்பு..!