ஆன்லைன் சூதாட்டம் தடை அமலில் இருக்கும் நிலையில்,... சகல வசதிகளோடு ஹைஃபை -யாக லாட்டரி விற்பனை...!

ஆன்லைன் சூதாட்டம் தடை அமலில் இருக்கும் நிலையில்,...  சகல வசதிகளோடு ஹைஃபை  -யாக  லாட்டரி விற்பனை...!
Published on
Updated on
2 min read

ஆன்லைன் சூதாட்டம் தடை அமலில் இருக்கும் நிலையில் தற்போது ஆங்காங்கே லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளது. சகல வசதிகளோடு அலுவலகம் அமைத்து ஹைஃபை  -யாக  லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழகத்தில் லாட்டரி சீட்டால் பல குடும்பங்கள் பாதிப்படைந்ததை அடுத்து, கடந்த 2003-ம் ஆண்டு அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. ஆனாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்டரி விற்பனையானது களைக்கட்டியுள்ளது. 

இந்நிலையில், கடந்த வாரம் போரூரில் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில்,  தற்போது, தாம்பரம் சேலையூர் பகுதியில் லாட்டரி விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக தாம்பரம் சேலையூர் சாலையில் உள்ள வனிக வளாகத்தில் அலுவலகம் அமைத்து, கூகுள் பே, போன்பே போன்ற சகல வசதிகளோடு, பிரிண்டிங் மிசின் வசதியோடு இங்கு லாட்டரி விற்பனையானது நடைப்பெறுகிறது.

குறிப்பாக லக்கி டிரா என்ற லாட்டரி விற்பனை இங்கு களைக்கட்டுவதாகவும், காலை 11.30மணி,  மதியம் 2 மணி, மாலை 4மணி, மற்றும் 6 மணி இரவு 7:30 மணி என 5 குலுக்கல் முடிவுகள் வெளியிடப்படுவதாகவும் அதனால் எப்பபொழுதுமே கூட்டம் முண்டியடிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்..

அதாவது,  நாள் ஒன்றுற்கு 3 முதல் 5 லட்சம் வரை கள்ளாகட்டுவதாகவும்,  குறிப்பாக கூலி வேலைக்கு செல்பவர்கள், ஆட்டோ ஒட்டுநர், கொத்தனர் வேலை செய்ய கூடிய நபர்கள், சிறு கடை நடத்தி வருவர்கள் என பலரும் இந்த 3 நம்பர் 4 நம்பர் லாட்டரி சீட்டு வாங்குவதாகவும்  தெரிவிக்கின்றனர்.

மேலும் பம்பர் பரிசாக 1 லட்சம், 3ஆம் எண்ணிற்கு 28 ஆயிரம் எனவும்,  2ஆம் எண்ணிற்கு  ஆயிரம் ரூபாய் எனவும், 1ஆம் எண்ணிற்கு 100 ரூபாய் எனவும்,  பரிசுகள் அறிவித்து  ஆன் லைனில் முடிவுகள் வெளியிடப்படுவதாகவும், அதனால் எப்படியாவது வென்று விடலாம் என லக்கி டிக்கெட் விற்பனையில் மக்கள் அதிகளவில் பணத்தை இழப்பதாகவும், கூறப்படுகிறது. 

மேலும், இந்த விவகாரத்தில் உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரிக்கை எழுந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com