உலக தரத்தில் விளையாட்டு திடல்...!!!

உலக தரத்தில் விளையாட்டு திடல்...!!!
Published on
Updated on
1 min read

உலகம் தரம் வாய்ந்த விளையாட்டு திடல் அமைக்க சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடம் ஆய்வு மேற்கொண்டார். 

செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு பின்புறம் உள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி, அங்குள்ள வழித்தடங்களை ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளையாட்டு திடல் அமைக்க, இரண்டு இடங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதனை ஆய்வு செய்ததாகவும், முதலமைச்சரிடம் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  

மேலும் விளையாட்டு திடல் உலகம் தரத்தில் இந்தியாவில் சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்த உதயநிதி, விளையாட்டுத் துறை மானியத்தில் விரிவாக பேசுவதாக கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com