ஆவினில் இனி உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள் - பால்வளத்துறை அமைச்சர் பேட்டி!!!

ஆவினில் இனி உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள் - பால்வளத்துறை அமைச்சர் பேட்டி!!!
Published on
Updated on
2 min read

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டத்திற்கு பிறகு  பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழ்நாட்டில் ஆவின் பால் கையாளுகின்றன திறன் ஒரு நாளைக்கு 45 லட்சம் தான் உள்ளது ஆனால் தேவை ஆனால் ஒரு நாளைக்கு தேவை 75 லட்சமாக உள்ளது...இந்த ஆண்டு இறுதிக்குள் ஆவின் பால் கையாளும் திறனை  70 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.பால் உற்பத்தியை பெருக்க வேண்டிய அவசியம் கட்டாயம் தற்போது உள்ளது..அதற்காக தான் விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகளை வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளோம்.

பால் விலையை உற்பத்தியாளர்களுக்கு அதிகரித்து கொடுப்பது உள்ளிட்ட பணிகளை விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.ஒரு வாரத்தில் ஆவின் உற்பத்தி பொருட்களை தரம்,சுவை உயர்த்தப்படும்.முடிந்த அளவுக்கு இயற்க்கை முறையில் மிக சிறந்த ஆவின் பொருட்களை தயாரிக்க முயற்சி செய்கிறோம்.வலுவான கட்டமைப்பு உள்ளது அதனை மேம்படுத்தி வருமானத்தை பெருக்கவும் எங்களுக்கு எதிரே உள்ள சவால்களை எதிர்கொள்ளவும் முடியும் என கூறினார்.

 அனுமதி இன்றி செயல்படுகின்ற பால் விற்பனையாளர் சங்கங்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தரமற்ற பால் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.எங்கள் ஆவின் பால் தரம் சிறப்பாக உள்ளது அதனை மேலும் மேம்படுத்த என்னனென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அத்தனையும் எடுப்பேன் என கூறினார்.

 மாடு வளர்க்கும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம்

 ஆவினில் இனி உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள்...உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகளை முழுமையாக பயன்படுத்த இருக்கிறோம்..கலப்பட பால் விற்பனை செய்வது மன்னிக்க முடியாத குற்றம்..விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.ஆவின் குடி தண்ணீர் இந்த வருடம் மீண்டும் கொண்டுவரப்படும்...இது குறித்த  அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.நான் இருக்கையில் அமர்ந்து ஒரு வாரம் தான் ஆகிறது ஒவ்வொன்றாக செய்து தருகிறேன்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com