ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம்

சென்னையில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.
ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம்
Published on
Updated on
1 min read

சென்னையில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவைத் தொடர்ந்து தற்போது ஜிகா வைரசும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழக எல்லைப்பகுதி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும், ஜிகா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது. அதன்படி, வழக்கமான பரிசோதனையான எலிசா பரிசோதனையைத் தொடர்ந்து, பி.சி.ஆர். பரிசோதனையிலும் ஜிகா வைரஸ் தொற்றைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்தியுள்ளது. இதுவரை கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில், 65 இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஏடிஸ் கொசுக்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் எந்த மாதிரியிலும் ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கபடவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com