அதிமுகவினர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோாிய மனு தள்ளுபடி!

வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

அதிமுகவினர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோாிய மனு தள்ளுபடி!

எடப்பாடி பழனிச்சாமி கைது நடவடிக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


திண்டுக்கல் ராஜ்மோகன், ராஜன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, கடந்த ஆண்டு தமிழக சட்டசபையின் அதிமுக கட்சி துணைத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அங்கீகாரம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.Why leaders who stood by OPS earlier have deserted him | The News Minute

போலீசாரின் எடப்பாடி கைது  நடவடிக்கையை கண்டித்து திண்டுக்கல் -திருச்சி சாலையில் அமைதியான முறையில் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாத வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றோம். ஆனால் நாங்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் கூறி, திண்டுக்கல் டவுன் மேற்கு போலீசார் நாங்கள் உள்பட 18-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த நடவடிக்கை பழி வாங்கும் வகையில் உள்ளது. எனவே எங்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். AIADMK Chief Palaniswami Faces Big Challenges Ahead

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மனுதாரர் தரப்பினர் நடக்க முயன்றதால்தான் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். மனுதாரர் உள்ளிட்டோர் மீதான வழக்கில் போலீசார் முறையாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து விட்டனர். எனவே மனுதாரரின் மனுதாரர்களின் கோரிக்கை ஏற்புடையதல்ல. இந்த வழக்கை தள்ளுபடி. செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

இதனை பதிவு செய்த நீதிபதி மனுதாரர்கள் மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் தேவைப்பட்டால் புதிதாக மனு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிக்க:சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள்: முதல் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!