கவர் ஸ்டோரி

3-வது முறையாக பிரதமர் மோடியை தவிர்க்கும் சந்திரசேகர ராவ்!!

6 மாதங்களில் 3வது முறையாக பிரதமரை வரவேற்பதை இன்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வரவேற்கச் செல்ல மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Suaif Arsath

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தெலங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். இதில், மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா, 19 மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் விமான நிலையம் சென்று பிரதமரை வரவேற்கும் நிகழ்வில், சந்திரசேகர ராவ் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் பிரதமர் சென்ற போதும் சந்திரசேகர ராவ் அவரை வரவேற்கவில்லை.

இந்நிலையில் குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா இன்று ஐதராபாத் செல்கிறார். பிரதமர் வருகைக்கு 2 மணி நேரம் முன் அதே விமான நிலையத்துக்கு வரும் யஷ்வந்த் சின்ஹாவை முதலமைச்சர் வரவேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி வரவேற்பு நிகழ்வில் ஒரு அமைச்சர் மட்டும் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.