கவர் ஸ்டோரி

சாலையில் மனுவோடு நின்றிருந்த பெண்.. காரை நிறுத்திய முதல்வர்!! நடந்தது என்ன?

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டலின் வரும் வழியில் மனுவோடு காத்திருந்த பெண்ணிடம் மனுவை பெற்று அவரிடம் முதல்வர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Malaimurasu Seithigal TV

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டலின் வரும் வழியில் மனுவோடு காத்திருந்த பெண்ணிடம் மனுவை பெற்று அவரிடம் முதல்வர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், அவர் எளிதாக சந்தித்து மனுவை அளிக்ககூடிய நிலை இருப்பது வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வர் வருகை என்றால் பத்து, 15 கார்கள் முன்னும் செல்வது வழக்கம். ஆனால் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அதிக அளவில் பாதுகாப்பு வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்துவது கிடையாது. குறைவான வாகனங்களோடு, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், எளிமையாக பயணம் மேற்கொண்டு வருவதை பலரும் வரவேற்று வருகின்றனர்.

அதிலும் திமுக பேனர்கள், போஸ்டர்கள், கொடிகள் இல்லாமல், சாலையில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யாமல் முதல்வர் ஸ்டாலின் பயணம் செல்வது நல்ல உதாரணமாக மாறியுள்ளது. இந்த நிலையில்தான் திருச்சியில் சாலை ஓரத்தில் காத்திருந்த பெண்மணி ஒருவருக்கு முதல்வர் ஸ்டாலின் உதவி செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

திருச்சியில் முதல்வரின் கான்வாய் செல்லும் வழியில்  பெண் ஒருவர் காத்திருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த முதல்வர் ஸ்டாலின், அந்த பெண்ணை பார்த்து அவர் வைத்திருந்த மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.