கவர் ஸ்டோரி

நேர்மையான அரசியலை சொல்லில் மட்டுமல்ல... செயலிலும் காட்டியிருக்கிறார் - முதலமைச்சர் பகவாந்த் மான்..!

பஞ்சாப் மாநிலத்தில் சுகாரத்துறை அமைச்சர் திடிரென கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆம் ஆத்மி அரசு என்பதால் மத்திய அரசு கைதுசெய்திருக்கிறது என நினைக்க வேண்டாம். ஆளும் ஆம் ஆத்மி அரசே கைதுசெய்திருக்கிறது. சொந்த அமைச்சரவை உறுப்பினரையே கைது செய்ய ஏன் உத்தரவிட்டார் பகவாந்த் மான்?.. பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.... 

Tamil Selvi Selvakumar

பஞ்சாப்பில் புதிய அடையாளமாக ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது தான் இந்தியாவின் அண்மை ஆச்சரியம். ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்தே பகவாந்த் மான் பல்வேறு அதிரடிகளை நிகழ்த்திக்கொண்டு தான் வருகிறார். அந்த வரிசையில் இப்போது இன்னொரு ஆச்சரியம் . ஆம் தனதுசொந்த அமைச்சரவையைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சரையே கைது  செய்ய உத்தரவிட்டு அதிரடி காட்டியுள்ளார். 

சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் விஜய் சிங்லா. இவர் நேற்று அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது பகவாந்த் மானின் நடவடிக்கை. இந்நிலையில் இன்று அதே அமைச்சர் விஜய் சிங்லாவை அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்திருக்கிறது. ஏன் இந்த கைது நடவடிக்கை என பலரும் குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கான விளக்கத்தையும் முதலமைசச்ர் பகவாந்த் மானே டுவிட்டர் வாயிலாக வெளியிட்டிருக்கிறார்.

ஒரு அமைச்சர் தனது துறையில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணிக்கும் ஒரு சதவீதம் கமிஷன் கேட்பதாக தனக்கு புகார் வந்திருப்பதாகவும், தன் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை கொடுத்துள்ள மக்களை தான் ஏமாற்ற விரும்பாத காரணத்தால் புகார் குறித்து விசாரித்து தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் புகாருக்கு உள்ளானவர் தான் விஜய் சிங்லா... இந்த விவகாரம் ஊடகங்களுக்கோ, எதிாக்கட்சிக்கோ தெரியாத நிலையில் தனக்கு மட்டுமே தெரிந்ததாக குறிப்பிட்டுள்ள பகவாந்த் மான், வெளிப்படையான, நேர்மையான ஆட்சியை வழங்குவேன் என கெஜ்ரிவாளின் முன்னிலையில் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தன் அரசின் அமைச்சர் மீதே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். 

முன்னதாக 2015 ஆம்ஆண்டு தனது அமைச்சரவையில் இருருந்து ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் ஒருவரை கெஜ்ரிவால் பதவியில் இருந்து நீக்கியதையும் பகவாந்த் மான் குறிப்பிட்டுள்ளார்... 

நேர்மையான அரசியல் சொல்லில் மட்டுமல்ல... செயலிலும் காட்டியிருக்கிறார் பஞ்சாப் முதலமைச்சர் பகவாந்த் மான்...