கவர் ஸ்டோரி

ராமதாஸ் VS அன்புமணி இடையே மோதல்?

Tamil Selvi Selvakumar

இளைஞர் அணிச் செயலாளர் தேர்வு தொடர்பாக அன்புமணி - ராமதாஸ் இடையே மோதல் என தகவல் வெளியாகியுள்ளது.

இளைஞர் அணிச் செயலாளர் பதவி யாருக்கு:

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி, முதலில் அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக பதவி வகித்திருந்தார். பிறகு பாமக கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அன்புமணி வகித்து வந்த இளைஞர் அணிச் செயலாளர் பதவி யாருக்கு? என்பதில் கேள்வி எழுந்தது.

தமிழ்குமரனை நியமித்த ராமதாஸ்:

இதைத்தொடர்ந்து, அண்மையில் பாமக தலைவராக  25 ஆண்டுகள் பதவி வகித்த ஜி,கே.மணியின் மகன் தமிழ்குமரனை இளைஞர் அணிச் செயலாளராக நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார்.

எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி:

ஆனால், ராமதாஸின் உத்தரவிற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு தமிழ்குமரனின் நியமனத்தை கட்சி மேலிடம் நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தை - மகன் இடையே மோதல்:

இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு ராமதாஸ் தேர்வு செய்த நபரை அன்புமணி எதிர்ப்பதால் தந்தை - மகன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த பின்னணியில், 25 வருடங்கள் பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை  இளைஞர் அணிச் செயலாளராக  ராமதாஸ் தேர்வு செய்தும், அன்புமணி எதிர்ப்பது ஏன்? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் வட்டமடித்து வருகின்றது.