ramadoss - pmk founder 
கவர் ஸ்டோரி

“பெருந்தன்மை இல்லாமல் நடந்துகொள்ளும் அன்புமணி” - ஏன் இவ்வளவு அவசரம்!? - ராமதாஸ் வருத்தம்.

என்னுடைய 46 ஆண்டுகால உழைப்பின் பலனை கேட்கிறார், அதிலும் செயல் தலைவர் பதவியையும் கொடுத்துவிட்டேன்...

Saleth stephi graph

கடந்த சில நாட்களாகவே பாமகவிற்கு நேரம் சரி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற  பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார். இதுக்கா பாமக -வில் பெரும் பதற்றத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே எத்தனையோ கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.

இந்நிலையில் நேற்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் பேசுகையில், “நான் அவரை செயல் தலைவாராக்கும்போது அவர் என்ன சொல்லியிருக்க வேண்டும்,”நான் இந்த வாய்ப்பை மகத்தானதாக கருதுகிறேன், கடைசி தொண்டனாக இருந்து கட்சிக்காக பாடுபடுவேன், என பேசியிருக்க வேண்டும். பதவியை விட கட்சிதானே முக்கியம்.அன்புமணியால் கட்சியை வழிகாட்டி முறையாக நடந்த முடியாது. அவர் நான் தலைவராக இருக்க கூடாது என்று எப்படி எண்ணுகிறார் என புரியவில்லை.மகன் என்ற காரணத்திற்காகவே என்னுடைய 46 ஆண்டுகால உழைப்பின் பலனை கேட்கிறார், அதிலும் செயல் தலைவர் பதவியையும் கொடுத்துவிட்டேன், இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்கிறார்” என ராமதாஸ் கூறும்போதே அவரது குரலில் ஒரு தடுமாற்றம் தெரிந்தது, தொடர்ந்து அவர் பேசுகையில் “2026 தேர்தல் முடியும் வரை நானே பாமக -வின் தலைவராக இருப்பேன். இதை இப்படி கேட்பதே எனக்கு பிடிக்கவில்லை. உழைக்காத ஒருவரின் கையில் கட்சியை கொடுக்க முடியாது.பெருந்தன்மை இல்லாமல் அன்புமணி செயல்படுகிறார்” என அவர் பேசியிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.