கவர் ஸ்டோரி

நாளை மறுநாள் சென்னை வருகிறாரா திரெளபதி முர்மு..!

Tamil Selvi Selvakumar

குடியரசு தலைவர் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் திரெளபதி முர்மு கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக நாளை மறுநாள் சென்னை வருகை தர திட்டமிட்டுள்ளார்.

குடியரசு தலைவர் தேர்தல் வருகிற ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அப்பதவிக்காக ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால், கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோர போட்டியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இதனிடையே பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரெளபதி முர்மு, கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி நாளை மறுநாள் சென்னைக்கு வருகை தர இருக்கும் திரெளபதி முர்மு, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரவுள்ளார். 

அதிமுகவில் தற்பொழுது ஒற்றைத்தலைமை விவகாரம் தீவிரமடைந்து வருகையில், கூட்டணி கட்சியான அதிமுகவிடம் ஆதரவு கோர வருகிறார் திரெளபதி முர்மு.

இந்த பின்னணியில் ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அடுத்ததாக ஆளும்  பாஜக கூட்டணி சார்பில் களமிறங்கியுள்ள திரெளபதி முர்மு தன்னுடைய சென்னை பயணத்தை நாளை மறுநாள் தொடங்க திட்டமிட்டுள்ளார்.