கவர் ஸ்டோரி

கையில் கறை...அருகில் மகள்...3 வருடம் காத்திருந்த தந்தையின் பாச போராட்டம்!! மனதை உருகவைக்கும் வீடியோ வைரல்!!

வெளிநாட்டில் இருந்து 3 வருடம் கழித்து தனது தந்தையை பார்க்க வந்த மகளை கண்ணீருடன் தந்தை வரவேற்ற உணர்ச்சிகரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Selvi Selvakumar

இன்றைய பிள்ளைகள் படிப்பதே ஒரு பெரிய வேலைக்கு சென்று, கை நிறைய சம்பளம் வாங்கி தனது பெற்றோர்களை பெருமைபட வைப்பதற்காக தான். இதுவே அவர்களின் நோக்கமாகவும் இலட்சியமாகவும் இருந்து வருகிறது. அதே சமயம் பெற்றோர்களின் எண்ணமும் அதுவாக தான் இருக்கிறது. அதற்காக தான் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை விட்டு, தாங்கள் பிறந்து வளர்ந்த நாட்டை பிரிந்து பெரிய வேலை, நல்ல வருவாய் ஆகியவற்றுக்காக வெளிநாடு செல்வது என்பது பரவலாக எல்லா நாடுகளிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படி அவர்கள் பிரிந்து சென்றதும், ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திக்கும்போது  பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே வரும் ஒரு பாசத்தை யாராலும் வர்ணிக்கமுடியாது. இதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. அதாவது வேலைக்காக வெளிநாடு சென்று 3 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பிய மகளை அவரது தந்தை கண்ணீர் மல்க வரவேற்ற உணர்ச்சிகரமான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் வேலை தேடி வெளிநாடு சென்ற மகள் ஒருவர் அங்கு பணிபுரிந்து விட்டு 3 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பி வருகிறார். அப்போது வாகனம் பழுது நீக்கும் கடையில் பணியாற்றியதில் கரங்கள் இரண்டும் அழுக்கடைந்து சோர்வாக ஓர் ஓரத்தில் அமர்ந்து இருக்கிறார். இந்நிலையில் அவரது மகள் சோர்வாகா அமர்ந்திருக்கும் தன் தந்தையை சர்ப்ரைஸ் செய்வதற்காக மறைந்து மறைந்து மெல்ல நடந்து செல்கிறார். பின்னர் தந்தையின் அருகில் சென்றதும் மிகுந்த உற்சாகத்துடன் கூச்சலிட்டு கத்துகிறார். மகளின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த தந்தை அழுதுக்கொண்டே ஓடி வந்து தன் மகளை கட்டிப்பிடிக்கிறார்.

ஆனால், அவரது கைகளில் வேலை பார்த்த கறைகள் இருந்ததால், மகளையும் அழுக்காக்க வேண்டாம் என்பதற்காக கட்டி பிடிக்க கூட முடியாமல் தந்தை திணறும் உணர்ச்சிகரமிக்க இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் படு வைரலாகி வருகிறது. 

மேலும் இந்த பாசமிகு வீடியோவை பார்த்த ஒருவர் நெகிழ்ச்சியூட்டும் இந்த அழகான வீடியோவால்  நான் அழுது விட்டேன் என கமெண்ட்டில் கூறியுள்ளார். அதேபோல் மற்றொருவர் தன் மகள் அழுக்காக கூடாது என தந்தை நினைக்கிறார். ஆனால், அதனை பற்றி எல்லாம் மகள் கவலைப்பட கூடாது என்று நான் உணர்கிறேன் என அவர்  கூறியுள்ளார்.  இவர்கள் மட்டும்மில்லாமல் இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதே சமயம் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களும் குவிந்த வண்ணம் உள்ளது.