கவர் ஸ்டோரி

எம்.பி பெயரில் போலி பாஸ்: காரில் கேர்ள் பிரண்டுடன் உல்லாசமாக இருந்த பல் மருத்துவர் கைது

எம்.பி பெயரில் போலி பாஸ் எடுத்து சாலையில் காரில் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பல் மருத்துவர் கைது செய்யப்டட்டார்.

Malaimurasu Seithigal TV

எம்.பி பெயரில் போலி பாஸ் எடுத்து சாலையில் காரில் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பல் மருத்துவர் கைது செய்யப்டட்டார்.

சென்னை அடுத்த பள்ளிக்கரணை, ரேடியல் சாலை, சதுப்பு நில பகுதியில், கடந்த, 10ம் தேதி இரவு, சொகுசு கார் ஒன்று நின்றது. அவ்வழியாக ரோந்து சென்ற பள்ளிக்கரணை போலீசார், காரை சோதனை இட்டனர். அதில், ஒரு நபர் இளம்பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தார். போலீசாரை கண்டதும், இளம்பெண் இறங்கி இருசக்கர வாகனத்தில் தப்பினார். பின்னர் காரில் இருந்த இளைஞரை பிடித்த போலீசார் அவனிடம் இ-பாஸ் உள்ளதா? எதற்காக இங்கு நிற்கிறாய் என கேள்விகளை அடுக்கினர். அப்போது அவர் தான் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு நெருக்கமானவர் எனக்கூறிக்கொண்டு, பாஸ் ஒன்றையும் போலீசாரிடம் காட்டியுள்ளார். அதனை பார்த்த போலீசார் இளைஞரை எச்சரித்து அனுப்பினர்.

எனினும் சந்தேகமடைந்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக காரில் இருந்த இளைஞர் குறித்து, தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனிடம் கேட்டறிந்தார். ஆனால் அவரோ அந்த இளைஞரை தனக்கு யார் எனகூறிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் சில தகவல்களின் அடிப்படையில் அந்த இளைஞரை மீண்டும் பிடித்து விசாரித்தனர். இதில், அவர் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஷியாம் கண்ணா என்பதும் அவர் ஒரு பல் மருத்துவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவர் வைத்திருந்த எம்.பி., பாஸ் போலியானதும் என்றும் தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.