கவர் ஸ்டோரி

யாருன்னே தெரியாதாம், ஆனால் சாந்தினி வீட்டிற்கு மட்டும் போவாராம்.. சிசிடிவியில் சிக்கிய மணி

Malaimurasu Seithigal TV

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உடன் இருந்த வீடியோ ஆதாரம் ஒன்றையும் நடிகர் சாந்தினி காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் நண்பர் ஒருவர் அவருக்கு மலேசியாவை சேர்ந்த நடிகர் சாந்தினியை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இதன் மூலம் பழகிய இருவரும் நாளையடைவில் கணவன்–மனைவி போல் வாழவே தொடங்கிவிட்டனர். இதனிடையே நடிகை சாந்தினி 3 முறை கர்ப்பமான நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ள அவர் மணிகண்டனிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு செவி சாய்க்காத அவர், கருவை கலைப்பதில் குறியாக இருந்து அதனை தெரிந்த மருத்துவரைக்கொண்டு கலைக்கவும் செய்துள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது தன்னிடம் பழகி ஏமாற்றியதாக பாலியல் புகார் ஒன்றை அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவர் மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ள நிலையில், பாலியல் புகார் வழக்கில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில்தான் மணிகண்டனுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு தொடர்பாக ஒரு பரபரப்பான சிசிடிவி காட்சிகளை சாந்தினி தரப்பு தற்போது காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளது. தனக்கும், நடிகை சாந்தினிக்கும் தொடர்பு இல்லை என கூறிவரும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எதற்காக நடிகை சாந்தினியை சந்திக்க சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.