கவர் ஸ்டோரி

செந்தில் பாலாஜி சிறைக்கு மாற்றம்...!

Tamil Selvi Selvakumar

சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த ஜூன் 21-ம் தேதி இருதய அறுவை சிசிச்சை செய்யப்பட்டது. இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது உடல் நிலை தேறியதையடுத்து,செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

இதனைத்தொடர்ந்து, மருத்துவனையில் இருந்து செந்தில் பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன், 108 ஆம்புலன்ஸ் மூலம் புழல் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரத்யேக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.