கொரொனா தடுப்பூசி மற்றும் ஜிஎஸ்டி நிலுவை தொகை தொடர்பாக மாநில குரல்கள் எல்லாம் ஒன்றிய அரசுக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக வலுக்க தொடங்கின.
மத்திய அரசுக்கு எதிராக தற்போது ஒவ்வொரு மாநிலமாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளன. மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, டெல்லி, பஞ்சாப், மஹாராஷ்டிரா என்று பல்வேறு மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக திரண்டு நிற்க தொடங்கி உள்ளன. அதாவது, தொடக்கத்தில் வேக்சின் விநியோகத்தை கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு போதிய வேக்சின் வழங்கவில்லை எனவும் தேவையான வேக்சின்களையும் மத்திய அரசு ஆர்டர் செய்யவும் இல்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
இதனால் மாநில அரசுகளே நேரடியாக வேக்ஷின்களை டெண்ட கேட்க ஆரம்பித்தனர். ஆனால், அதோடு இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுடன் வேக்சின் வியாபாரத்தில் ஈடுபட முடியாது, மத்திய அரசுக்கு மட்டுமே வேக்சின்களை விற்பனை செய்வோம் என்று மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்கள் தெரிவித்துவிட்டன.
இந்த நிலையில்தான் மாநில அரசுகள் வேக்சின் குறித்து குரல் கொடுக்க தொடங்கி உள்ளன. முதலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பாஜக ஆளாத தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். அதில், அனைத்து அரசுகளும் ஒன்று சேர்ந்து வேக்சின் தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தமிழ்நாடு அரசு ஆதரவு அளித்துள்ள நிலையில் மற்ற மாநிலங்களும் இதே கோரிக்கையை வைத்து வருகின்றன. ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் இதே கோரிக்கையை வைத்துள்ளார். எப்போது மத்திய அரசுடன் கணிவுடன் செல்லும் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது கொதித்து எழுதுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.