கவர் ஸ்டோரி

மகாராணி எலிசபெத்தின் மறைவு செய்திக்கு முன்பு...வானில் நடந்த மாற்றம்...நெகிழ்ச்சியில் மக்கள்...!

Tamil Selvi Selvakumar

70 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் இறப்பிற்கு சில நிமிடங்கள் முன்பு வானத்தில் வானவில் தோன்றியதால் அங்கிருந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இரண்டாம் எலிசபெத் ராணி:

பிரிட்டன் மகாராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி, 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி லண்டனில் பிறந்தார். பட்டத்து இளவரசராக இருந்த அவரது தந்தை 6ஆம் ஜார்ஜ், பிரிட்டனின் மன்னராக முடிசூடியதைத் தொடர்ந்து, 2ஆம் எலிசபெத் 1936ம் ஆண்டு முதல் பட்டத்து இளவரசியானார். அப்போது அவருக்கு வெறும் 10 வயது மட்டுமே. 

70 ஆண்டுகால பதவி:

யுனைட்டட் கிங்கிடமின் ராணியான 2 ஆம் எலிசபெத் தனது 70 ஆண்டுகால ஆட்சியை மிகுந்த கண்ணியத்துடனும், சிறப்பாகவும் நடத்தி வந்தார். தற்போது 96 வயதாகும் இவர், இங்கிலாந்து ஆட்சியில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர்.

எலிசபெத் இறப்பு:

இப்படி சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாராணியின் உடல்நிலை கடந்த 2 நாட்களாக ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் வெளியாகின. உடல்நிலை மோசமான நிலையில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவந்த அவர், நேற்று காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை இல்லத்தில் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுசெய்து அறிந்து, ஏராளமானோர் அரண்மனை வாயிலில் கூடி கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தனர்.

வானத்தில் தோன்றிய வானவில்:

இந்நிலையில், மகாராணி எலிசபெத்தின் மறைவு செய்தி அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பிரிட்டன் பக்கிங்காம் அரண்மனைக்கு அருகில் வானவில் தோன்றியதால், அதை பார்த்த மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் கோஷமிட்டனர். பொதுவாக ஒருவரின் மரணத்தின்போது இப்படி வானவில் தோன்றுவது இறந்த நபர் சொர்க்கம் செல்வார் என்ற நம்பிக்கை ஆங்கிலேய மக்களிடம் உள்ளது. இதனால் எலிசபெத் மரணத்திற்கு சில நொடிகள் முன்பு திடீரென தோன்றிய வானவில் மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.