கவர் ஸ்டோரி

எம்.ஜி.ஆர் -ஜெயலலிதாவுக்கு இருந்த அதிகாரம் இ.பி.எஸ்க்கும்...

Malaimurasu Seithigal TV

சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்ட பிறகு செய்தாளர்களை சந்தித்தார் அதிமுக மூத்த நிர்வாகியும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதன்.

அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையைத் தான் விரும்புவதாகவும் திட்டமிட்டபடி ஜூலை 11 ஆம் நாள் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்றும் கூறினார்.அதிமுக பொதுச்செயலாளர்களாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதிதா ஆகியோர் பதவி வகித்த போது என்னென்ன அதிகாரங்கள் அவர்களுக்கு இருந்ததோ அதே அதிகாரங்களை உள்ளடக்கிய பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அதிமுக பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அதிகாரம் இல்லை எனக் கூறியதைப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வைத்தியலிங்கத்திற்கு அது பற்றி கூற எந்த அதிகாரமும் இல்லையெனவும் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.