கவர் ஸ்டோரி

உதயநிதிக்கு புது பதவியா?.. என்னவா இருக்கும்!!

உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் புது பதவி கிடைக்கப்போகிறது என வெளியான தகவல், அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றி ஒரு மாத காலமான நிலையில், இது நம்ம தமிழகம்தானா என யோசிக்கும் அளவில், ஆட்சி நடத்தி வருகிறார் ஸ்டாலின். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, ஆய்வு செய்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பிற கட்சியினரிடத்திலும் நட்பு பாராட்டி வருகிறார்.

முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்கும்போது கொரோனா உச்சத்தில் இருந்த நிலையில், அனைத்து கட்சி கூட்டம் நடத்தி முழு ஊரடங்கை அறிவித்தார் ஸ்டாலின். மேலும் பல திட்டங்களையும் அறிவித்து வருகிறார். இருப்பினும், நடந்து முடிந்த தேர்தலில் மேலும் சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாமே என ஸ்டாலின் வருத்தம் தெரிவித்த நிலையில், அதையே பிரசாந்த் கிஷோரும் தெரிவித்திருக்கிறார். இவர்கள் போட்ட கணக்கு வேற போல.. களத்தில் நடந்த கணக்க வேரையாம். எனவே வரப்போகும் உள்ளாட்சி, எம்பி தேர்தல்களில் கூடுதல் தொகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ஸ்டாலின் தற்போது இறங்கி வருவது போலதான் தெரிகிறது.

அரசியல் போக்கை பார்த்தால் சீமான், தேமுதிக, பாமக போன்றவைகளுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த சூழலில் இன்னொரு விஷயமும் கசிந்து பரபரப்பை ஏற்படுத்துகிறது. அதாவது திமுக ஆட்சியை தொடங்கியதில் இருந்து ஸ்டாலின் ஒருபுறம் கலக்க… இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினும் வேற லெவல்ல பன்னிட்டு இருக்காரு. உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படாதது வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வச்சதுபோலதான் தெரிகிறது.

எனினும் உதயநிதியின் செயல்பாடுகள் அனைவரும் கவர்ந்து வரும் நிலையில், அவருக்கு முக்கிய பொறுப்பு தரப்போவதாக தெரிகிறது. ஆட்சியில் எந்த பொறுப்பும் இல்லையாம், கட்சியில்தான் ஏதோ முக்கிய பொறுப்பு என முனுமுனுப்பு எழுகிறது.