victims relavtive who crying on the final cremation 
கவர் ஸ்டோரி

பாதுகாப்பு படையினர் எங்கே..? காங்கிரஸ் எழுப்பிய கேள்வியின் அர்த்தம் என்ன!?

இந்திய-பாகிஸ்தான் எல்லைகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது...

Saleth stephi graph

பஹல்காம் தாக்குதல்; கண்காணிப்பு.. பாதுகாப்பு .. காங்கிரஸ் எழுப்பிய அந்த முக்கிய கேள்வி என்ன? 

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி இந்தியாவையே புரட்டிப்போட்ட பெரும் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 கொல்லப்பட்டனர்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திர உள்ளிட்ட பல மாநில சுற்றுலாப் பயணிகளும், 2 வெளிநாட்டு பயணிகளும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தாக்குதலை நிகழ்த்தியது பாகிஸ்தானை தளமாக கொண்டு செய்லபடும் லஷ்கர் - இ - தொய்பா உடன் தொயர்புடைய The Resident Front - என்ற அமைப்பு என்று கூறப்படுகிறது.

ஆனால் பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் இருநாடுகளும் 60 ஆண்டுகளாக இருந்த பல முக்கிய ஒப்பந்தங்களை முறித்துக்கொண்டுள்ளன. இதனால் இந்திய-பாகிஸ்தான் எல்லைகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. 

தெற்காசியா முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களையும் திரட்டி வரும்அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள  பேரில், ஜம்மு காஷ்மீரில் 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற தீவிரவாத வன்முறையில் பொதுமக்கள் 19 பேர் கொல்லப்பட்டனர். அதே ஆண்டில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 18 பேரும் 84 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.  கடந்த ஆண்டான 2024இல் ஆண்டில் பொது மக்களுள் 31 பேர் கொல்லப்பட்டனர்.  இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் சூழல் மூண்டது.

இதனை கட்டுக்குள் கொண்டு வந்து இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவை வளர்க்க சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் எல்லையை மீறி தாக்குதல் நடத்தக்கூடாது என்பது அடிப்படை அம்சமாகும்.  இந்த அம்சங்களை மீறி தாக்குதல் நடைபெற்றதால், இந்திய சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முறித்துள்ளது. 

இந்த சூழலில் தான் இத்துணை பாதுகாப்பு படை வீரர்கள் இருக்கும்  பகுதியில் பொதுமக்கள் மீது 20 நிமிட துப்பாக்கிச்சூடு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

நேற்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது, இதில் பகல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது, இதனைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி “ இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்க முடியாது.  மேலும் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இது பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் தோல்வியா என்ற கேள்வியை எழுப்பும் கட்டாயம் உருவாகி உள்ளதாகவும் கூறியிருக்கிறது.

மேலும் தாக்குதல் நடந்த பின்னர் 20 நிமிடம் வரையில் அங்கு பாதுகாப்பு படையினர் வரவில்லை “எங்களை  கீழிறக்கி கொண்டுவந்து, முதலுதவி செய்தவர்கள் அங்கிருந்த உள்ளூர்வாசிகள்தான்” என பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியிருக்கிறார்..

சுற்றுலா பயணிகள் அதிகளவில் உள்ள இடத்தில் இல்லாமல் பாதுகாப்புப்படையினர் எங்கு சென்றனர்?  என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து  ராணுவ நடவடிக்கைகளுக்கான பொது இயக்குநராக இருந்த  நிபுணர் பிபிசி செய்தி முகாமைக்கு அளித்த தகவலில்  இந்தத் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலா குறித்தான உறுதியான, கடுமையான  நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்