pmk internal clash 
கவர் ஸ்டோரி

“ பணத்துக்காக பழச மறந்து அவர்கூட போனியே..” பாமக வழக்கறிஞர் பாலுவை கலாய்த்து பாடல் பாடிய கோபு..! அன்புமணி பகீர்!

“பணத்துக்காக ஐயாவை மறந்து அவர் கூட போனியே, குலசாமி ஐயாவ மறந்து அவர் கூட போனியே.. அவருக்கு வயசாயிருச்சு என்று சொல்லி அவர் கூட போனியே...

Saleth stephi graph

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாலுவை விமர்சித்து புதிதாக நியமிக்கப்பட்ட கோபி வழக்கறிஞர் பாலுவை கடுமையாக விமர்சித்து “மீம் பாடலை” பாடியிருப்பது வைரலாகி வருகிறது. 

கடந்த சில நாட்களாகவே பாமகவின் நிலைமை சரியாக இல்லை. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற  பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார்.

ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே எத்தனையோ கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை. 

கட்சியின் முகம்..!

ராமதாஸ் நீக்கம் செய்து அறிவிக்கும் நிர்வாகிகள், மீண்டும் பொறுப்பில் இருப்பதாக அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.ஆனால் இந்த போக்கு நிர்வாகிகளை குழப்பி உள்ளது.

இந்நிலையில், பாமக சமூக நீதிப் பேரவை மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலுவை நீக்கி, அவருக்கு மாற்றாக வழக்கறிஞர் வழக்கறிஞர் கோபு என்ற நபர் நியமிக்கப்பட்டுள்ளார்.. இதேபோல, 20-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்களையும் நீக்கிவிட்டு, புதியவர்களை நியமனம் செய்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பாமக செயலாளராக சுரேஷ், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் சங்க தலைவராக மூர்த்தி, மாநிலத் தேர்தல் பணி குழு செயலாளராக பூபால் கண்ணன், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக ஸ்ரீதர் ஆகியோரை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பாடல் பாடிய கோபி!

90 களில் வெளியான ஒடிசா பாடல் சமீபத்தில் இணையத்தில் பயங்கர வைரலாக ஓடிக்கொண்டிருந்தது. இந்திய அளவில் பல மொழிகளில் அந்த பாடல் டப் செய்யப்பட்டு நல்ல மீம் படலாகவே மாற்றப்பட்டது.“இந்த பாடலை பரிதாபங்கள் சுதாகர் spoof செய்து நம்ம ஊருக்குள் இன்னும் வைரலாகி விட்டார்”

அந்த பாடலை கொஞ்சம் ‘modify’ செய்து அன்புமணியையும், வழக்கறிஞர் கோபுவையும் செம்மையாக கலாய்த்துள்ளார் கோபு.

பணத்துக்காக ஐயாவை மறந்து அவர் கூட போனியே, குலசாமி ஐயாவ மறந்து அவர் கூட போனியே.. அவருக்கு வயசாயிருச்சு என்று சொல்லி அவர் கூட போனியே.. ஐயா நீச்சல் குளத்துல குளிக்கிற நேரத்துல அவர் கூட போயிட்டியே.. குளித்து முடித்து முகத்தை துடைக்கும்போது பனையூர் போய்ட்டு இருந்தியே.. சீச்சிச்சீ.. சீச்சீச்சீ.. நீ ஒரு ச்சீ" எனப் பாடியுள்ளார் கோபு. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.