கவர் ஸ்டோரி

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்...சசிகலா அறிக்கை!

Malaimurasu Seithigal TV

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தி சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மாணவியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதற்கு தமிழக அரசின் அலட்சியப்போக்கே காரணம் என குற்றம் சாட்டியிருந்தார். இந்த சம்பவம் குறித்து அதிகாரம் படைத்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறுக்கீடு இல்லாமல் காவல்துறையினர் வெளிப்படையான விசாரணை செய்து,  சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.