டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாக கூறினார். தமிழக வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என மோடி கூறியதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடியிடம் என்னென்ன கோரிக்கைகள் வைத்துள்ளோம் என்பதை பட்டியலிட்டார். அதை தொடர்ந்து செய்தியளார்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றார். மேலும் தங்கள் கட்சி ஓட்டளிக்காதவர்கள் வருத்தப்படும் அளவுக்கு தன்னுடைய செயலபாடுகள் இருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். பேட்டியின் போது மத்திய அரசை ஒன்றிய அரசு என ஸ்டாலின் குறிப்பிட்டார்.