கவர் ஸ்டோரி

ஆச்சரியப்படுத்தும் ஒற்றைக்கண்... அதிசய ஆட்டுக்குட்டியால் நெகிழ்ந்த கிராம மக்கள்...

Malaimurasu Seithigal TV

அரியலூரில் அதிசயமாக ஒற்றை கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை ஆர்வமுடன் கண்டு செல்லும் பொதுமக்கள்.

அரியலூர் மாவட்டம், தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுருநாதன். இவர் கடந்த பத்தாண்டுகளாக கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு வளர்த்து வந்த  ஆடு இரட்டை குட்டிகளை ஈன்றது. அதில் சிவன் போன்று நெற்றியில் ஒற்றை கண்ணுடன் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. இந்த  அதிசய ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் வியந்த வண்ணம் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

ஆடி முதல் வெள்ளியில் சிவனைப் போன்று நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியால் கிராமத்திற்கு அதிசயம் நிகழும் என பொதுமக்கள் அனைவரும் நம்பிக்கை தெரிவித்து ஆர்வமுடன் வந்து பார்த்து வணங்கி செல்கின்றனர். இதனால் ஆடு வளர்க்கும் தங்களது குடும்பத்திற்கும் நல்லது நடக்கும் என மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.