கவர் ஸ்டோரி

போராட்டத்தில் இளைஞரை கொடூரமாக தாக்கிய கூடுதல் மாவட்ட ஆட்சியர்...தேஜஸ்வி யாதவ் கூறியது என்ன..?

Tamil Selvi Selvakumar

பீகாரில் ஆசிரியர் நியமனம் தாமதத்திற்கு எதிராக போராடிய இளைஞரை, கூடுதல் மாவட்ட ஆட்சியர் கொடூரமாக தாக்கிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பணி நியமனம் தாமதம்:

பணி நியமனம் தாமதம் செய்வதற்கு எதிராக, பாட்னாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை நிறுத்துவது குறித்து போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக காவல்துறையினருடன் பாட்னா கூடுதல் மாவட்ட ஆட்சியர் கே.கே.சிங் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

இளைஞர்கள் மீது தடியடி:

போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். ஆனால், போராட்டக்காரர்கள் அதனை கேட்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வர்ந்துள்ளனர். இதனால் அவர்கள் மீது தடியடி நடத்தவும், தண்ணீர் பீய்ச்சி கூட்டத்தை கலைக்கவும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் காவல்துறைக்கு உத்தரவிட்டார். 

தேசிய கொடியுடன் இளைஞர் போராட்டம்:

கூடுதல் மாவட்ட ஆட்சியர் காவல்துறைக்கு உத்தரவிட்டதை தொடர்ந்தும், தேசியக்கொடியுடன் சாலையில் படுத்துக்கொண்டு இளைஞர் ஒருவர் போராட்டம் நடத்தினார். இதனால் ஆத்திரமடைந்த கூடுதல் மாவட்ட ஆட்சியர், அந்த இளைஞரை தடியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

வீடியோ வைரல்:

தேசியக்கொடியுடன் சாலையில் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்திய இளைஞரை, கூடுதல் மாவட்ட ஆட்சியர் கே.கே.சிங்  தடியால் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

விசாரணைக்குழு:

 கூடுதல் மாவட்ட ஆட்சியர் கே.கே.சிங் தடியால் இளைஞரை தாக்கும் வீடியோ வேகமாக பரவ தொடங்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு பாட்னா மாவட்ட ஆட்சியர் வந்து உடனடியாக விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டார்.

துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்:

இந்த சம்பவம் தொடர்பாக, பேசிய துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் போராட்டத்தை தடுப்பதற்கே தடியடி நடத்தப்பட்டதாக கூஈற்ய அவர், இளைஞரை  கூடுதல் மாவட்ட ஆட்சியர் கே.கே.சிங் தாக்கியதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விசாரணையில், அவர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது, பீகாரில் புதிதாக 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார். இந்நிலையில்,  தற்போது பணி நியமனம் தாமதம் செய்வதற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி, அதில் ஒருவரை கூடுதல் மாவட்ட ஆட்சியர் தடியால் தாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Employment offered to Youths in Bihar's Streets today