கவர் ஸ்டோரி

தாம்பரத்தில் சகோதரருடன் தகராறில் ஈடுபட்ட சிறுவன் தூக்கிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை சார்பில் கூறப்பட்ட விநோத காரணம் என்ன?

malaimurasu.com

சென்னை தாம்பரத்தை அடுத்த ரங்கநாதபுரம் 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாபு - சந்தியா தம்பதியர். இவர்களுக்கு தாரிஸ் மற்றும் கோகுல் என்ற இரண்டு மகன்கள் உண்டு.

பாபு குவைத்தில் வேலை பார்த்து வர, சந்தியா குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் பாபு - சந்தியா தம்பதியரின் மகன்களில் தாரிஸ் என்பவர் அசைவ உணவை விரும்புவதில்லை எனக் கூறப்படுகிறது.

தாரிஸ் - தற்கொலை செய்தவர்

இந்நிலையில் 17-ம் தேதியன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தாரிஸின் சகோதரர் கோகுலுக்கு, அவரது நண்பர்கள் சிக்கன் பிரியாணி கொடுத்து வயிறார சாப்பிடுமாறு கொடுத்தனர்.

ஆனால் தாரிஸ், அசைவ உணவை வீட்டில் வைத்து சாப்பிடக்கூடாது எனக் கூறி தம்பியை வெளியே விரட்ட முயற்சித்தார். இதன் காரணமாக சகோதரர்கள் இடையே கடுமையான தகராறு வந்துள்ளது.

இதனால் விரக்தியடைந்த தாரிஸ் வீட்டின் தனி அறைக்குள் சென்றவர் வெகுநேரமாகியும் வெளியே வராதிருந்தார். மகன்கள் தகராறை அறிந்த சந்தியா அறையின் கதவை வெகு நேரம் தட்டியும் திறக்காததால் உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தாரிஸ் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டவர், தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் இழந்துவிட்டதாக கூறினர்.

இதையடுத்து தாரிஸின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பிரியாணி சாப்பிடும் தகராறில் அண்ணந் தம்பி இடையே சண்டை ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் சிறுவன் தவறான முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பிரியாணி பிரச்சினையில் ஒரு உயிர் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.