கவர் ஸ்டோரி

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உத்தவ் தாக்கரே...அச்சத்தில் ஷிண்டே!

Malaimurasu Seithigal TV

மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 15 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சுனில் பிரபு வழக்கு தொடர்ந்துள்ளார். சிவசேனா சார்பாக இவ்வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜராகியுள்ளார்.

ஆனால் இவ்வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள மறுத்த உச்சநீதிமன்றம், ஜூலை 11 அன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் தாங்கள் மகாராஷ்டிர அரசியலில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உத்தவ் தாக்கரே தொடர்ந்துள்ள இந்த வழக்குக்கு நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது