கவர் ஸ்டோரி

”நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்......” ஆளுநருக்கு முரசொலி பதில்!!

கபட நாட­கம், கள்ள நாட­கம், இருட்­ட­டிப்பு, பாலியல் நாட­கம், போன்­ற­வற்றை அரங்­கேற்றுவது பா.ஜ.க. அ.தி.மு.க வுக்கு அன்­றாட வேலை .

Malaimurasu Seithigal TV

தி.மு.க எதைச்செய்தாலும் வெளிப்படையாகச் செய்யும்.  மவுன நாடகம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. 

ஆளுநரை தங்கள் சித்தாந்த புகழ் பாடக்கூடிய ஒருவராக அரசு நினைக்கிறதா என்று பாஜகவின் மகளிர் அணி தலைவர் கேட்டிருக்கிறாரே என்ற கேள்விக்கு.....

ஆளுநர் மாநில அரசாங்கத்தின் ஊதுக்குழலாகத்தான் செயல்பட வேண்டும்.  ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல.  மாறாக அவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். மாநில அமைச்சரவையும் முதலமைச்சரும் மேற்கொள்ளும் முடிவை தான் ஆளுநர் பிரதிபலிக்க வேண்டும்.  அப்படிதான் சொல்கிறது அரசமைப்பு சட்டம்.  நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்று கவியரசர் உவமித்த மிக உயர்வான உணர்வை ஒட்டித்தான் ஆளுநர் பேச வேண்டும் நடந்து கொள்ள வேண்டும் என முரசொலி பதிலளித்துள்ளது.

திசை திருப்புவதற்காக ஆளும் கட்சி திட்டமிட்டு இந்த தமிழகம்,தமிழ்நாடு என்ற புது பிரச்சினையை கிளப்புகிறது என்று திமுக மீது குற்றம் சாட்டுகிறார்களே என்ற கேள்விக்கு...

இந்த புது பிரச்சனையை கிளப்பி இருப்பது ஆளுநரே தவிர திமுக அல்ல.  தமிழ்நாடு என்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தமிழகம் என்று சொல்ல வேண்டும் என்பது ஆளுநரின் ஆராய்ச்சி குறிப்பு. தமிழ்நாடு என்று பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஏராளமான காரணங்களைச் சொல்லி ஆயிற்று. ஆனால் அது சிலருக்குப் புரியவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்?.  மேலும் ’பாரதிய ஜனதா’ என்பதை ‘இந்திய ஜனதா’ என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? அதைப் போலத்தான், தமிழ்நாடு என்பதற்கும் தமிழகம் என்பதற்கும் வேறு வேறான பின்னணியும் நோக்கமும் இருக்கிறது என முரசொலி பதிலளித்துள்ளது.

-நப்பசலையார்