க்ரைம்

“ஐஸ்கிரீம் வாங்கி தந்து.. 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்!” - செங்கல்பட்டு வாலிபர் மீது ‘போக்சோ’

வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்..

Muthu Lakshmi

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது பள்ளி மாணவிக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்

கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவன் (43) என்ற நபர் சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். பின்னர் ஐஸ்கிரீம் வாங்கி தந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம்சாட்டப்பட்ட மகாதேவனைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மகாதேவன் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும்  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. பின்னர் கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த  நபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.