க்ரைம்

1.200 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை மதுவிலக்குப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மாலை முரசு செய்தி குழு

காஞ்சிபுரம், ஐயங்கார்குளம் கற்பக விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு காஞ்சிபுரத்தில் விற்பதற்காக ரயிலில் வந்து கொண்டிருப்பதாக மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், புதிய ரயில் நிலைய வளாகத்தில் பிரேம்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.