க்ரைம்

மாமா, மாமா மகன் சேர்ந்து 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்...

மும்பையில் 14 வயது பெண்ணை மாமனும் அவரது மகனும் சேர்ந்து பல முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் எழுந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

ஒரு 14 வயது சிறுமியை, அவரது தாய் மாமாவும், தாய் மாமனின் மகனும் வற்புறுத்தி, ஒரு முறை இல்லாமல் பல முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

போரிவல்லியில் உள்ள தனது தாய் மாமனின் வீட்டில் தங்கி இருக்கும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கொடூர சம்பவத்தை தனது மற்றொரு உறவினரிடம் கூறியதால் அந்த உறவினர் போலீசை அனுகியுள்ளார்.

விரார் பகுதியில் உள்ள தனது உறவினரிடம் கூறிய நிலையில், விரார் போலீசாரிடம் கொண்டு சேர்த்த நிலையில், சம்பவத்தின் குரூரத்தை ஒட்டி, மும்பையின் MHB காவல் நிலையத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் 50 வயது மற்றும் 19 வயதினர் என கண்டறியப்பட்ட இலையில், அவர்கள் மீது போக்சோ மற்றும், 376, 376(2)(n), 376(2)(f) ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.