குழந்தைகள் உலகம் பெரியவர்களை விட வித்தியாசமானது. அதுவும் இன்றைய காலகட்டம் எல்லாவற்றையும் வித்தியாசமாக மாற்றியிருக்கிறது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், எல்லாருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்தாலும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் வரை அவர்கள் பலவீனமானவர்கள் தான்.
அதனால்தான் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டிய, நல் அறிவுரைகளை வழங்கவேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. ஆனால் ‘வேலியே பயிரை மேய்ந்த கதையாய்’ பெரும்பாலான சமயங்களில் பெரியவர்கள் தான் குழந்தைகள் மீதான மோசமான, வக்கிரமான வன்முறைகளை செய்கின்றனர். மேலும் சிலர் அவர்க்ளின் அறியாமையையும், இயலாமையையும் பயன்படுத்திக்கொண்டு மிக மோசமான வேளைகளில் ஈடுபடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம்தான் தென்னையில் நடந்துள்ளது.
ஆண்டிப்பட்டி 10 -ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது நபர். இருவரும் ஒன்றாக இருப்பதை வீடியோ எடுத்த 16 வயது சிறுவன். மேலும் தன்னுடன் உடலுறவுகொள்ளவிட்டால் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் எனக்கூறி பாலியல் வன்கொடுமை. சிறுமி கர்ப்பமானதால் 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ராயவேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி பாலக்கோம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியிடம் அதே ஊரைச்சேர்ந்த 52 வயதாகும் பிச்சைமணி என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை உடலுறவுக்கு இணங்க வைத்துள்ளார். அதன் பின்னர் அந்த சிறுமியுடன் பலமுறை உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரும் தனிமையில் இருந்ததை அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது செல்போனில் படம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் “தன் ஆசைப்படி நடக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக” மிரட்டி சிறுமியை நிர்பந்தித்துள்ளார். அதனால் பயந்துபோன சிறுமி, அதற்கு சம்மதித்துள்ளார். அதன் பின்னர் அந்த சிறுவனும் சிறுமியுடன் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டதாக்கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியை அவரது தாயார் ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும் கூறியதைக் கண்டு சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் அந்த சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த அனைத்தையும் விவரமாக கூறியுள்ளார்.
அதனைக் கேட்டு மனம் உடைந்த அவரது தாயார் இந்த குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த பிச்சை மணியையும், சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சிறுவனையும் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.