க்ரைம்

80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை... 2 இளைஞர்கள் கைது செய்த போலீஸ்...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே,  80 வயது மூதாட்டியை வாலிபர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

ஓமலூர் அடுத்த தாரமங்கலம் பகுதியை சேர்ந்த மூதாட்டி கடந்த 10 நாட்களுக்கு முன் விவசாய நிலையத்தில் வேலை செய்தார். அவரை நோட்டமிட்டபடி அங்கு மது அருந்திகொண்டிருந்த இளைஞர்கள் இருவர், போதை தலைக்கேறியதும் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ளனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மூதாட்டியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில்,  சேலம் எஸ்.பி ஸ்ரீ அபிநவ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்றது. இதில் இருவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்கள் நங்கவள்ளி பெரியசோரகை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் விக்னேஷ் என்றும், மூதாட்டியை மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ததையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.