murder  
க்ரைம்

“மாதா கோயில் அருகே கிடந்த 20 வயது இளைஞரின் உடல்” முகம், புருவம், தலையில் இருந்த கொடும்காயம்..! பின்னணியில் போக்சோ வழக்கு!!

அந்த இளைஞரின் கண் புருவம், கீழ்தாடை, மற்றும் தலையில் பலமாக தாக்கி கொலை செய்யப்பட்டு ....

மாலை முரசு செய்தி குழு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ‘இருந்தை’ கிராமத்தில் ஒரு மாதா கோவில் உள்ளது.

இந்த மாதா கோவிலுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகாலை வழிபாட்டிற்கு செல்லுவது வழக்கம். அப்படி கடந்த 28.10.2025 -ம் தேதியும் ஜெபம் பண்ணுவதற்காக மக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் இளைஞர் ஒருவர் தேவாலயத்திற்கும், RC பள்ளிக்கும் இடையில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கிடந்துள்ளார். யாரோ போதையில் படுத்திருப்பதாக தேவாலயத்திற்கு சென்ற மக்கள்  நினைத்துக் கொண்டனர். பிரார்த்தனை முடிந்த பிறகும் அந்த நபர் அசையாமல் கிடப்பதை பார்த்து அதிர்ந்த மக்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். 

அப்போது அந்த இளைஞரின் கண் புருவம்,  கீழ்தாடை, மற்றும் தலையில் பலமாக தாக்கி கொலை செய்யப்பட்டு  பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ந்துள்ளனர்.  பிறகு கொலை செய்யப்பட்டு இறந்து இடந்தவர்  அதே ஊரைச் சேர்ந்த அண்டணி ஆரோக்கிய ஜோ என்ற 20 வயது இளைஞர் என்பவர் தெரிய வந்தது.  உடனே அங்கிருந்த மக்கள் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

 தகவலை அறிந்த திருநாவலூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தனி பிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்ற போலீசார்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து இறந்த கிடந்த ஆரோக்கிய ஜோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

 பிறகு கொலை செய்யப்பட்டு இறந்தவரின்  தாய் கிரேசி மேரி  திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்ற திருநாவலூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

 இந்த சம்பவம் குறித்து  காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து   இளைஞரை யார் கொலை செய்தது ? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ன நோக்கம்? என பல கோணங்களில் போலீசார் விசாரணை செய்ய தொடங்கினார்.

 போலீசாரின் விசாரணையில் இருந்தை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் தேவா என்பவர் மீதும்  கொலை செய்யப்பட்டு இறந்துபோன ஆண்டனி (எ) ஆரோக்கிய ஜோ மீதும் கடந்த 2024 ஆம் ஆண்டு உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு  பதிவு செய்யப்பட்டு தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக பொல்லேசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

 இந்த நிலையில் தேவாவின் தம்பியான லிஷ்சன் (வயது 20) தனது அண்ணன் தேவாவை  போக்சோ வழக்கில் மாட்டிவிட்டது ஆரோக்கிய ஜோதான் என கடுப்பில் இருந்துள்ளார். தனது அண்ணனை பாலியல் வழக்கில் சேர்த்து காட்டிக் கொடுத்ததற்காக ஆரோக்கிய ஜோவை தீர்த்து கட்ட வேண்டும் என ஏற்கனவே திட்டம் தீட்டி உள்ளார்.

 இந்த நிலையில் 27.10.2025 தேதி அன்று  இரவு லிஸ்சன் என்பவர் மது வாங்கி வைத்துக் கொண்டு ஆரோக்கிய ஜோவை மாதா கோவிலின் அருகே வரவைத்து அவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர். ஆரோக்கிய ஜோவிற்கு மது போதை தலைக்கேறி  என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அப்போது லிஷ்சன் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் ஓங்கி தலையிலும், முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் கடுமையாக அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இறந்த ஆரோக்கிய ஜோவின் உடலை அங்கையே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

அதன் பின்னர் கொலை செய்த லிஷ்சன் அவருடன் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுவனையும் போலீசார் கொலை வழக்கில் கைது செய்து உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.