க்ரைம்

பல் பிடுங்கிய விவகாரம் "24 போலீசார் பணியிட மாற்றம்"!

Malaimurasu Seithigal TV

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரத்தில், 24 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனை விசாரிக்க தமிழ்நாடு அரசு அமுதா ஐஏஎஸ் தலைமையில் சிறப்பு விசாரனைக்குழு  நியமிக்கப்பட்டது. இந்நிலையில் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வரும்  நிலையில்,  நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன் 24 போலீசாரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சுத்தமல்லி ஆகிய காவல்நிலையங்களில் பணிபுரிந்துவந்த  24 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கில் சிக்கி காத்திருப்பு பட்டியலில் இருந்த ஆயுதப்படை காவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.