க்ரைம்

“நான் பாத்துக்குற கொடு” - 3 வயது குழந்தையை சீரழித்த கொடூரம்! மூடிமறைக்க விதிக்கப்பட்ட அபராதம்.. பஞ்சாயத்து சார்பில் நடந்த கறிவிருந்து?

காவல் துறையில் புகார் அளிக்க வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..

Muthu Lakshmi

ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை மூடிமறைக்கும் முயற்சியாக, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அபராதம் விதித்துத்து குற்ற செயலை மறைத்துள்ளனர். மேலேயும் அந்த அபராத பணத்தில் ஒரு பகுதியை உள்ளூர் கொண்டாட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டதை தெரிந்து கொண்ட காவல்துறை, அதில் தலையிட்டு குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட சுனில் லோஹரா என்ற நபர், சனிக்கிழமை மாலை பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தாய் தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரிடம் வீட்டு வேலைகளை செய்யச் செல்லும் மாறு கூறிவிட்டு, “குழந்தையைத்  நான் பாத்துக்குற, என்னிடம் கொடு” என்று லோஹரா கேட்டுள்ளார். அதே கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் நம்பி தனது குழந்தையை கொடுத்து சென்றுள்ளார் தாய். இந்நிலையில் அக்குழந்தையை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்று, அங்கு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் லோஹரா. இதனால் காயமடைந்த அக்குழந்தை அழத் தொடங்கியதும், குழந்தையின் தாய் ஓடி வந்து பார்த்துள்ளார். அதையடுத்து அந்த நபரை அடித்து வெளியே அனுப்பிவிட்டு, காயமடைந்த குழந்தையை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவரிடம் அழைத்துச் சென்று முதலுதவி பெற்றுள்ளார்.

இந்த கொடூர செயலை தெரிந்துக்கொண்ட கிராம பஞ்சாயத்து மக்கள், இந்த வழக்கு நேரடியாகக் காவல்துறைக்குச் செல்வதற்குப் பதிலாக, கிராமப் பஞ்சாயத்தால் முடிக்க முடிவு செய்துள்ளனர். சிலர் புகார் அளிப்பதற்கு பதிலாக இந்த வழக்கை கிராமத்திற்கு உள்ளேயே வைத்திருக்க விரும்பியதாகக் கூறப்படுகிறது. சட்டத்தை ஈடுபடுத்துவதற்கு பதிலாக, இந்த விவகாரத்தை உள்ளூரிலேயே தீர்த்து வைக்கும் ஒரு வழியாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊர் பஞ்சாயத்து கூட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்க வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த அபராதத் தொகையில் முதல்கட்டமாக ரூ. 20,000 செலுத்தியுள்ளார். பின்னர், கிராம பஞ்சாயத்து அந்தப் பணத்தை கறி விருந்து மற்றும் மதுபான விருந்து அடங்கிய ஒரு கொண்டாட்டதிற்கு செலவு செய்துள்ளது. மீதமுள்ள ரூ. 80,000-ஐ ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறு குற்றம் சாட்டப்பட்டவரிடம் தெரிவித்துள்ளனர். கிராம மக்கள் இந்த வழக்கை மூடிமறைக்க முயற்சிப்பதாகவும், கிராமத்திற்குள்ளிருந்தே ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அது காவல் நிலையத்திற்கு வராமல் தடுக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகளுக்குத் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து காக்ரா காவல் நிலைய பொறுப்பாளர் மோகன் குமார் இது குறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளார். 

இதையடுத்து, காக்ரா போலீசார் கிராமத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்டவரின் தாயரை குற்ற சம்பவம் குறித்து விசாரித்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், குற்றத்தை மறைக்க நடந்த நிகழ்வுகளை குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவித்ததாக காவல்துறை கூறியது. ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் அங்கு சென்றபோது, ​​அபராதத் தொகையால் நடத்தப்பட்ட கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார், மேலும் காவல்துறை குழந்தையின் தாயிடமும் வாக்குமூலம் பதிவு செய்து வழக்கு பதிவு செய்தது. மேலும் சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது போல குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காப்பாற்றும் விதத்தில் கிராம பிரமுகர்கள் செயல்பட்டதாகவும், இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். மேலும் அபராதம் விதித்து அதில், கிராம கொண்டாட்டம் நடந்தது மனிதாபிமானமற்ற  செயல் என்றும் கண்டித்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்