மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சூரிய பிரகாஷ் வயது (30). வெளிமாநில லாரிகளுக்கு வழிகாட்டும் லாரி புக்கிங் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இவர், இன்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து வடுகபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் ஆண்டிபட்டி அருகே அவ்வழியாக ஹரியானா மாநிலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி மோதியதில் முன் பக்கத்தில் சூரியபிரகாஷ் இருசக்கர வாகனத்துடன் சிக்கினார்.
இதில் வாலிபர் சூரிய பிரகாஷ் லாரியின் முன்பக்கத்தில் சிக்கியது அறியாத லாரி ஓட்டுநர் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் வரை லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பின்புறமாக வந்த பிற லாரி ஓட்டுநர்கள் அதனை அறிந்து லாரியை மறித்து தகவல்களை கூறியபோது ஹரியானா லாரியின் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதில் லாரியின் முன்பக்கத்தில் சிக்கிய வாலிபர் சூரியபிரகாஷ் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.பின்னர் சமயநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லாரியின் முன்பகுதியில் சிக்கி உயிரிழந்த சூரிய பிரகாஷ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
தற்போது இந்த விபத்தை தொடர்பாக வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.ஆறு மாத குழந்தை உட்பட இரண்டு பெண் குழந்தையின் தந்தையான சூரிய பிரகாஷ் விபத்தில் உடல் சிதறி உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்