க்ரைம்

“29 வயது கள்ளக்காதலனுக்காக.. முன்னாள் காதலை முறித்த 50 வயது பெண்” - உல்லாசத்திற்கு பின் நடந்த கொடூர கொலை!

ஆசையாக பேசி தோட்டத்திற்கு ரகசியமாக வருமாறு அழைத்துள்ளார்

Muthu Lakshmi

கர்நாடக மாநிலம் செங்காவி கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான லட்சுமி தேவம்மா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பத் தகராறு காரணமாக கணவனை பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆழ்துளை கிணறு தோண்டும் தொழிலாளியான நாகராஜ் (55) என்பவரோடு வேலைக்கு செல்லும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியை 29 வயது இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னாள் கள்ளக்காதலனான நாகராஜை தவிர்த்து அந்த 29 வயது வாலிபருடன் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். இந்த விஷயம் நாகராஜின் தெரியவந்ததை அடுத்து ஆத்திரமடைந்த அவர், “அவன் கூட பேசாத” என்றும் இந்த உறவை கண்டித்தும் உள்ளார். ஆனால் லட்சுமி தேவம்மா அதனைப் பொருட்படுத்தாமல் தனது புதிய காதலுடனான பழக்கத்தைத் தொடர்ந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த நாகராஜ், லட்சுமி தேவம்மாவைத் தான் வேலை செய்யும் ஆழ்துளை கிணறு தோண்டும் ஆசையாக பேசி தோட்டத்திற்கு ரகசியமாக வருமாறு அழைத்துள்ளார். நம்பி சென்ற பின்னர் இருவரும் வழக்கம்போல உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன் பிறகு, அந்த 29 வயது வாலிபர் யார் என்று கேட்டு மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார்.

இருவருமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்தில் நாகராஜ் அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால் லட்சுமி தேவம்மாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த லட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை மறைக்க முயன்ற நாகராஜ், அவரது உடலைத் தோட்டத்தின் மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளார்.

மறுநாள் காலையில் தோட்டத்திற்கு வந்த உரிமையாளர், பாதி எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்து உடனடியாகக் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த போலீசார் பாதி எரிந்த உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், கள்ளக்காதலன் நாகராஜை அதிரடியாகக் கைது செய்தனர். கள்ளக்காதலில் ஏற்பட்ட மோதல் காரணமாக பெண் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்