க்ரைம்

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 60 லட்சம் ருபாய் மோசடி செய்த நபர் கைது!

சென்னையில் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 60 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Tamil Selvi Selvakumar

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி அதங்கராஜ். இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஆவடியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி சுரேஷ் 13 லட்சத்தை அதங்கராஜிடம் வாங்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இதேபோன்று நான்கு பேரிடம் என மொத்தம் 59 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மோசடியில் ஈடுபட்ட சுரேஷை கைது செய்தனர்.