க்ரைம்

60 வயது பெண் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை- பழிக்கு பழியாக நடைபெற்ற கொலை சம்பவம்…  

திண்டுக்கல் அருகே, பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் அருகே, பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நந்தவன பட்டியில் கடந்த 2010ஆம் ஆண்டு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனராக இருந்த பசுபதிபாண்டியன் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார்  உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, வழக்கு விசாரணை, நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய, நந்தவனப்பட்டி பகுதியைச் சேர்ந்த நிர்மலா தேவி என்ற 60 வயது பெண்ணை மர்ம நபர்கள், தலை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இ.பி. காலனி அருகே பெண்ணின் உடல் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெண்ணின் தலையை வெட்டி எடுத்து சென்று,  பசுபதி பாண்டியன் வீட்டின் கேட் அருகே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.  தகவல் அறிந்த வந்த போலீசார் பெண்ணின் உடலையும், தலையையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பசுபதி பாண்டியன் கொலைக்கு  பழிக்குப்பழியாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.