க்ரைம்

62 வயது முதியவர் கல்லால் அடித்து கொலையா?

Malaimurasu Seithigal TV


சென்னை வடபழனியில் 62 வயது முதியவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சென்னை வடபழனி 100 அடி சாலையில் முகத்தில் படுகாயத்துடன் முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக பொதுமக்கள் வடபழனி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்தவர் சூளைமேட்டு பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் (62) என்பது தெரிய வந்திருக்கிறது. எலக்ட்ரீஷியன் ஆக பணிபுரிந்து வரும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. 

மேலும் கடந்த மூன்று மாதமாக வீட்டிற்கு செல்லாமல் சாலை ஓரங்களில் படுத்து தூங்கி வந்துள்ளார். அவரது முகத்தில் கல்லால் தாக்கியது போன்ற காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா  அல்லது விபத்தில் உயிரிழந்துள்ளாரா என்ற கோணத்தில் வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.