சென்னை கீழ்ப்பாக்கம் பராக்கா சாலை பகுதியில் வசித்து வருபவர் 65 வயதுடைய அரிஷ்குமார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு 19 வயது இளம் பெண்ணிடம் கடந்த சில மாதங்களாக தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்திருக்கிறார். அந்த பெண்ணும் மறுத்தும் பலமுறை இளம் பெண்ணை பின் தொடர்ந்து காதல் டார்ச்சர் செய்து வந்த நிலையில் ஆத்திரமடைந்த இளம்பெண் கடந்த ஜனவரி மாதம் அயனாவரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் முதியவர் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, முதியவர் தனது கல்லுத்தில் கத்தியை வைத்து கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கத்தியால் மேலோட்டமாக கழுதை கீறிக்கொண்டு நாடகமாடி இருக்கிறார். எனவே போலீசார் அவரை கண்டித்து அனுப்பி வைத்திருக்கிறார்.
இருப்பினும் அடங்காத முதியவர் தொடர்ந்து இளம் பெண்ணை பின் தொடர்ந்து காதல் டார்ச்சர் செய்த முதியவர் இளம் பெண்ணின் போன் நம்பருக்கு காதல் கவிதைகளை அனுப்பி டார்ச்சர் செய்திருக்கிறார். இதனால் மனமுடைந்த இளம்பெண் அவரது உறவினரான 27 வயதுடைய வாலிபரிடம் தெரிவித்திருக்கிறார். எனவே அந்த வாலிபர் நேற்று முதியவர் அரிஷ்குமார் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த இளம்பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அந்த பெண்ணின் உறவினரான 27 வயது வாலிபர் இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 19 வயது இளம்பெண்ணுக்கு 65 வைத்து முதியவர் காதல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்