சென்னை மாதனாங்குப்பம் பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன், ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக கொரட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், தனிப்படை போலீசார் அங்கு பதுங்கி இருந்த தபதி, பிரகாஷ், ஜெயக்குமார், பாலகிருஷ்ணன், ஐசக் ராபர்ட், ஈசாக், கிருஷ்ணகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த 25ம் தேதி கல்பாளையத்தை சேர்ந்த பாக்ஸர், விக்கி, சீனா ஆகியோருடன் இவர்களுக்கு தகராறு ஏற்பட்டதும், இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர்கள் 3 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டி அவர்கள் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது.
7 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 5 ஆசிட் பாட்டில், 12 கத்தி, 5 இருசக்கர வாகனம், 7 செல்போன்கள், 2 கிலோ கஞ்சா, 1 எடை போடும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.