pocso accused  
க்ரைம்

“பேத்தி வயசு இருக்க குழந்தைகிட்ட போய்..” போக்சோ வழக்கில் கைதான 72 வயது ஸ்டேஷனரி கடை ஓனர்!!

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் ...

மாலை முரசு செய்தி குழு

இந்தியாவின் எந்த பகுதியையும் குறிப்பிட்டு இந்த இடம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்ற சொல்ல முடியாதது இந்த  தேசத்தின் மிகப்பெரும் அவலம். அதை சமூகம் இம்மியளவு கூட உணர்ந்ததாக தெரியவில்லை. அதன் நீட்சிதான் தினம்தோறும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள். குடும்பம் , வேலை பார்க்கும் இடம், பள்ளி, கல்லூரி, ஏன் சமயங்களில் கோவில்களுக்குள்ளும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக எத்தனையோ போராட்டங்களும் சட்டங்களும் வகுக்கப்பட்டாலும், பெண்கள் இன்னும் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர், கோவையில் 19 வயது கல்லூரி மாணவி கூட்டு  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதே கோவை மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்ட 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் அங்குள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த மாணவியிடம் 72 வயது முதியவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பயந்துபோன மாணவி தனது பள்ளியின் ஆசிரியர்களிடம் இதுபற்றி அழுதபடி தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளித்து உள்ளனர். மேலும் இதுபற்றி உடனடியாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரி  சம்பந்தப்பட்ட பள்ளியிலும், மாணவியிடமும் விசாரணை மேற்கொண்டார்.

போலீசாரின் விசாரணையில் முதியவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிபடுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவி அளித்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஸ்டேஷனரி கடை உரிமையாளரான முதியவர் விஜயகுமார்(72) என்பவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்த போலீசார் கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.